கண்ணம்மா....
என் தோழி.........
இதழ் பிரியா புன்சிரிப்போடு
இமையும் சிரிக்கும்
அருவியென பொழியும் பேச்சில்
அறிவின் வாசம் வீசும்
தீது நன்று திருத்தும் உரிமையில்
நட்பின் நேசம் பொங்கும்
அவ்வேளைகளில்
அவள் தோழி...............
கண்ணம்மா....
என் காதலி...
அரிதான பயணமொன்றில்
என்னோடு ஓர் ஒற்றை நட்சத்திரம்
பயணித்த வேளையில்
நிலவாய் இருப்பது நானே
என உரைத்து
தனிமை போக்கி
தன்னிலையும் என்னிலையும்
மென்மையாய் உணர்த்திய
அவ்வேளைகளில்
அவள் காதலி.....
கண்ணம்மா
என் மனைவி....
கட்டளையிட்டு
என் கோபம் ரசித்து
என் தவறைத் தவிர்க்க வைத்து
என் நிலைதன்னை யோசித்து
எனக்காகவே
எனை நேசித்த
அவ்வேளைகளில்
அவள் மனைவி.....
கண்ணம்மா
என் தந்தை....
உறவின் பொருளுரைத்து
உரிமை தான் பெருக்கி
எனைச் சில சமயம் ஊக்கி
என் பிழைதனை போக்கி
வாழ்வின் பொருளுரைத்த
அவ்வேளைகளில்
அவள் தந்தை.....
கண்ணம்மா.....
எனதுயிர்....
எல்லாம் இழந்தும் பெற்றும்
ஏதுமற்ற பொழுதுகளில்
யாதுமற்றவனாய்
செயலிழக்கும் தருணங்களிலெலாம்
நினைவுகளிலாடி
எனை உயிர்ப்பிக்கும்
அவ்வேளைகளில்
அவள் எனதுயிர்......
Like · · Unfollow Post · Share · Delete
Deepa Nagarani, Usha Maharani, Thenammai Lakshmanan and 15 others like this.
Vijayalakshmi Viji aahaa....bala..kannamma...thozhiyaai, kadhaliyaai. manaiviyaai, thandhayaai, uyiraai.... ellamumaai... arumai....
January 16 at 3:22pm · Unlike · 4
Bala Ganesan Sadhasivam அக்கா..............நன்றிகள் அக்கா...............
January 16 at 3:23pm · Like · 2
Bala Ganesan Sadhasivam Thank u tamizh akka :-)
January 16 at 6:11pm · Like · 2
Thurairatnam Thayalan //கண்ணம்மா.....
எனதுயிர்....
எல்லாம் இழந்தும் பெற்றும்
ஏதுமற்ற பொழுதுகளில்
யாதுமற்றவனாய்
...See More
January 16 at 7:01pm · Unlike · 3
ஒப்பிலான் பாலு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வித்தியாசமான கவிதை ...அருமையாக இருக்கு ..வாழ்க வளமுடன் !
January 16 at 7:12pm · Unlike · 3
Vishnu Rajan நல்ல கவிதை ஜி ..// கண்ணம்மா
என் தந்தை....
உறவின் பொருளுரைத்து
...See More
January 16 at 9:02pm · Unlike · 1
Amutha Thamizh · 20 mutual friends
செம form ல இருக்கு .. gud .. நல்லது ..
January 17 at 10:26am · Unlike · 2
Bala Ganesan Sadhasivam நன்றிகள் தயாளன்........
January 17 at 12:04pm · Like · 1
Bala Ganesan Sadhasivam பாலு ஜி.........மிக்க நன்றிகள்......
January 17 at 12:04pm · Like · 1
Bala Ganesan Sadhasivam விஷ்ணு ஜி......மிக்க நன்றிகள்....
January 17 at 12:05pm · Like · 1
Bala Ganesan Sadhasivam அம்முக்கா.....!!!!!!! :)))))))))
January 17 at 12:05pm · Like · 1
Usha Maharani ஆஹா ......அருமையோ அருமை பாலா !!!
அழகான சிந்தனை அமுதான தமிழில் மிளிர்கிறது ! :-)
January 18 at 2:58am · Unlike · 2
Usha Maharani கண்ணமாவை என் தாய் என்று சொல்லாமல் போன காரணம் என்னவோ ???
January 18 at 2:59am · Unlike · 3
Vimala Siva கண்ணம்மா..என் குட்டிக் கவியரசு....!!!...:(
January 24 at 12:14pm
un kannamma ungalidim sikkiram varuvall
ReplyDelete