Friday, August 14, 2015

கண்மலர்ந்து பார்......

விரல்களாய் வருடினேன்....

நீ விண்மீனானாய்....
இதழ்களால் வருடினேன்....
நீ.....
இதயத்தின் துடிப்பானாய்.....
பெண்ணே.....
உன்னை
காதலாய் வருடினேன்....
நீயோ......
கானல் நீரானாய்.........
எண்ணங்களால் வருடி...
எழுத்துக்களாய் பதிவு செய்து....
வண்ணங்களை வடிக்கவே....
நினைத்திருந்தேன்.....
நீயோ......
புன்னகையாய்
புலம்பெயர்ந்து....
புலமபல்களாய்
வடிவம் கொண்டாய்.....
இன்றோ....
கண்ணீரால் பூஜை செய்து
என காயங்களால்
யாகம் வளர்த்தி...
கவிதைகளால்
அர்ச்சிக்கிறேன்.....
கனவுகளாகவேனும்
கண்மலர்ந்து பார்..

தவறியவனின் உயில்.........

ருவழியில் பிறந்தேன்...
எந்தை கருவிழியில் வளர்ந்தேன்....
இருவிழியில் ஒரு காட்சியாய்
அம்மையப்பரின்
கனவின் வழி
வாழ்வைக் கண்டேன்.....

உறு வழியும்
உதவா வழியுமாய்..
என்னெதிரில் இருக்கக் கண்டு...
தெரிவின் வழி
தீராமால்
தெருவின் வழி திரியக் கண்டேன்....

இதம் தரும் புகையென்றேன்...
சுகம் தரும் மதுவென்றேன்...
நலம் தரும் பொய்களென்றேன்..
ஒழுக்கமது தவறி நின்றேன்...
ஓதுவதும் வீணென்றேன்.....

கனவுகள் இனிமையென்றேன்...
கற்பனையே களிப்பென்றேன்...
அறிவுதரும் மொழி மறந்தேன்...
நல்ல பொருள் நூல் தவிர்த்தேன்....
நல்லோரின் இனம் மறைத்தேன்....

எல்லாம் கடந்து போக...
இன்றோ...
உறையும் வழியின்றி.
தெருவழி திரியும்
திருவில்லா உருவானேன்....

என்னோரே என்னோரே...
எழில் மிகுந்த மண்ணோரே...
இறை தந்த மறையெல்லாம்..
மறை வகுத்த பொறையெல்லாம்
உறையென உறைவோரே....

இன்றோ நாளையோ...
என்னாவி கூடு களையலாம்...
அன்றேனும் உணருங்கள்...
தவறுபவர்களும் திருந்தக்கூடும்....
திருந்தியதால் வருந்தக்கூடும்....

மன்னிப்பே...
மானுடத்துள்....
மறையாமல் உறையும் இறை.....
மன்னிக்காத மனதில்
இல்லை இறை வகுத்த பொறை......

கடந்த காதல்க(ள்).......

அலையலையாய் கிளம்பிய
அவசர நினைவுகளுக்குள்
தொலைந்து போனது
என்னுள் பூத்த நொடிகள்....

கடந்த காலங்களில்
நான் கடந்த காதல்களில்
நெகிழ்ந்த மணித்துளிகள்
புதைந்து கிடக்கின்றன.....

ஐந்தாம் வகுப்பிலிருந்து
ஆரம்பித்த அந்த ஆச்சரியம்
வளர்ந்து கொண்டே இருக்கிறது
தடுப்பணைகள் தாண்டி......

புரியாத பிரியங்களில்
மூழ்கிக் கிடந்த காலங்கள்....
வளர்ச்சிக்குத் தக்கவாறு
மலர்ந்திட்ட தருணங்கள்......

நட்புக்கும் காதலுக்கும்
நடுவில் நின்று
கனவுகளாலும் கவிதைகளாலும்
தடுமாறிய பருவங்கள்.....

வயதொன்று கூட
வரியொன்று கூடும்
தென்னையாய்........
ஒவ்வொரு காதலின் பின்னும்...
அனுபவங்களைக் கூட்டிக்கொண்டு...

எல்லோரையும் போலவே...
எனக்கும் காதலினால்..
வசந்தங்களும் உண்டு
வருத்தங்களும் உண்டு...

வசந்தங்களுக்குப் புன்னகைத்து..
வருத்தங்களுக்கு அழுதோய்ந்து
இயல்புக்கு திரும்பும்போதெல்லாம்
எட்டிப்பார்க்கும் இன்னோர் காதல்.....

ஒவ்வொரு முறை மலரும்போதும்
இந்தச் செடியில்
இதுவே கடைசி மலர்
என்றே கருதுகிறேன்.....

உதிர்ந்தபின் உதிக்கும்
இன்னொரு மலர்
புன்னகையோடு புறந்தள்ளுகிறது
என் கருத்துக்களை......

இன்னும் மலரலாம்
ஏராளமான பூக்கள்....
என் இதயப்பூஜைக்கென...
ஆயினும்....

நானே காதலிக்காத என்னை
வலிக்க வலிக்க
காதலித்த பூக்கள்
இன்றெங்கோ வாசம் பரப்பியபடி.....

கடந்தே போகத்தான்
காத்திருக்கிறேன்....
நான் கடந்த காதல்களையும்
எனைக் கடந்த காதல்களையும்........

என் மனமே...ஏகாய் நீ.....

தனிமை நீடித்த
ஒரு வேளையில்
ஏக்கத்தவமிருந்த பொழுதுகளில்
எங்கோ தோன்றிய ஒரு பொறி
தீப்பற்ற..........

என்னுள் எழுந்தன
இவ்வரிகள்.......


காதே நீ கேளாய்...
கண்ணுகத்த காட்சிகளென
உன்னொத்தவர் கூறினும்
காதே நீ கேளாய்.......

வாயே நீ திறவாய்....
உண்மை நிலையென
உன்னுள்ளம் விளம்பிடினும்
பிறர்பற்றிய செய்திகளுக்கு
வாயே நீ திறவாய்....

மனமே நீ வருந்தாய்.....
எதுவரினும்
எவர் விலக்கலிலும்
மனமே நீ வருந்தாய்.....

உள்ளாற உணர்ந்த மழை
உன்னோடு உறவாட
உன்னோடு இருப்பவரை
ஒருபோதும் கணிக்காதே....

என்னுடல் கொண்ட நிழல்
இருட்டினில் பிரியுமெனில்
என் மனம் கொண்ட நிழல்
சில கருத்தினில் பிரியுமன்றோ......

எனவே மனமே நீ தளராய்........

உயிருருக உடல் கரைய
பிறரைக் காதலித்த
பெருந்தவறு இனி வேண்டாம்
உன்னைக் காதலிக்க
மனமே நீ முயல்வாய்....

பிறந்த உடல்
இறந்து போகும்
பிரிந்த உயிர்
தனியே வாடும்
உடன்வருவோர் எவருமின்றி
கடந்தே ஏகும் காலங்களில்....
கிடந்தே கழியும் நொடிகளில்...
உணர்ந்தே போவாய் மனமே......

நட்பென்றும் காதலென்றும்
நலம் நாடும் உறவென்றும்
நொந்த நிலை இனியும் வேண்டா...
என் மனமே....
பந்த நிலைதானறுத்து
பகுத்தறிவின் விலை தொகுத்து
எந்தன் மனமே ஏகாய் நீ.........

நீயும் ஒரு பெரு நதிதான்....

பெண்ணே......
நீயும் ஒரு பெரு நதிதான்.......


ஊற்றெனப் பொங்கி
அருவியாய் விழும்போது
தாய் மடி தாண்டி
தந்தை தோள் தாவும்
சிறு குழவி....

விழும் அருவி நீரெல்லாம்
ஒன்றாய் கூடி
குளமாய், ஏரியாய்
குழுமும் போது
ஏதுமறியா சிறுமி.....

இருகரை தொட்டு
ஆசை நுரைவிட்டு
சலசலத்து நடக்கையில்
இன்பங்கள் பொங்கும்
அழகான குமரி.....

நதிவழிப்பயணத்தில்
இடர்ப்படும் ஓடைகளை
உள்வாங்கிக் கொண்டு
வீர நடை பயில்வதாய்
வாழ்வின் தடைகளை
வாழ்ந்து கடப்பதில்
இன்றைய புதுமைப்பெண்....

அச்ச மட பயிர்ப்பு நாணங்களை
அணைகளாக்கி
உன் அறிவின் வேகமும்
ஆத்ம தாகமும்
தடுக்கப் படும்போது
நீ குடும்பத் தலைவி....

அணைகளால் தடுக்கப்பட்ட
நதி நீராய்
வாழ்வியலால் சூழப்பட்டு
அவ்வப் போது
அனுமதித்த மதகுகளில்
உன் அன்பின் வெள்ளம்
வடியும் போது
நேசமிகு மனைவி.....

மதகு வழி பாய்ந்தாலும்
பேதங்கள் ஏதுமின்றி
உன் அன்பின் வெள்ளம்
கால்வாய் வழியாய்
சில காய்ந்த நிலங்களையும்
ஈரப்படுத்துமே
அப்போது நீ தாய்......

வளைவுகளின் அழகோடு
வலிவின் அழிவும்
கொண்டவள் நீயெனினும்
அழகுகளின் மறைவிலும்
அன்பின் ஆழங்களிலும்
அழிவுகளை ஒளித்துக் கொண்டாய்
அங்கு நீ தலைவி....

ஆழ்கடல் சேரும் பொது
பெருங்கடலையும்
பின்வாங்கவைத்து
ஊடுறுவும்
திறன் காட்டி
கழிமுகமாகும் போது
யாவுமாகி நின்றாய்...

பெண்ணே நீயும்
ஒரு பெரு நதிதான்....

"தீ"ண்டாமை...................

பக்திக் கடலினில்
படர்ந்துவரும்
வேத அலைகளில்
நுரையாய் இருப்பதுதான்
வர்ணாசிரமம்.......

பிரிவதே வளரும்
என்ற
பேருண்மையின்,
பிரபஞ்ச அடிப்படையில்
வளர்வதற்காய்
பிரிக்கப் பட்டதே
வர்ணாசிரமம்....

என்னைப் பொறுத்தவரை
அது
வருண ஆசிரமம்......

வருணக் கடவுள்
பொழியும் மழையினை
உழவன் வாழ்த்த
நெசவாளி நோக
சலவைத் தொழிலாளி
சபிக்க

இப்படி ஒரே மழை
முரண்பட்டு நிற்பதாய்
ஒரு கொள்கை
பிழை பட்டு கிடக்கிறது.......

வர்ணாசிரம வேர்கள்
பார்ப்பனீயத்தில்
முளைத்து
சாதீயங்களில் கிளைபரப்பி
தீண்டாமையில் பூப்பூத்தது

அது விதையின் குற்றமல்ல....

சாதி என்பது பிறப்பாலமைவதல்ல
ஒருவனின்
வாழ்தலில் விளையும்
வழக்குகளால் அமைவது

அந்தணன் என்பவன் அறவோன்......
இந்த வரிகளில் விளங்குகிறது
பிறப்பால் அமைவதல்ல சாதி

ஆயினும் காலப்போக்குகளில்
சில களைகளின் விளைச்சலில்
மாந்தர்தம் மனதினில்
தூவிய விஷ விதையாய்
முளைத்துப் பரந்து
விரிந்து கிடக்கிறது......

உடலில் நோய் வந்தால்
மருந்து தீர்வு
உறுப்பில் நோய் வந்தால்
அறுவையே தீர்வு
பதிலாக
உடம்பையே வெறுத்தல்
எவ்வித தீர்வு?????

களைகள் சிலவற்றிற்காய்
காடு நிறை வயலையே
கொளுத்துவது
அறிவுள்ளோர்க்கும்
அறமுள்ளோர்க்கும்
அழகல்ல..........

நம் வீட்டு தூசகற்ற
துடைப்பம் தேடலாம்
வீடு மாறவோ
அன்றி
வீடு கொளுத்தவோ
விளையலாமா???

சிந்திப்பீர்
செயல்படுவீர்.......

தீண்டாமை பெருங்குற்றம்
எனில்
ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை
மட்டும்
அவர் சார்ந்த வகுப்பின்
பெயராலேயே
ஒதுக்குவது
உயர்தனித் தீண்டாமை அல்லவா?????

முரண்களிடையே
தவிக்கிறோம்....
முரண்களூடே
முடிவெடுக்கிறோம்....
முரண்பாடாய் நடப்பதை
மட்டும்
முழுமூச்சுடன் செய்கிறோம்......

மேடு பள்ள வேறுபாடு களைய
மேட்டை வெட்டி
பள்ளம் நிறையுங்கள்....
மேட்டை பள்ளமாக்கி
பள்ளத்தை மேடாக்கி
வேறுபாட்டின்
மாறுபாடுகளை
விளைவிக்க முயலாதீர்.......

தீண்டாமை குற்றமெனில்
இதுவும் ஒருவகை
தீண்டாமைதான்........

இழந்த சொர்க்கமே.......

கனவுகளில் கண்டெடுத்த
பாதையொன்றை.....
கவிதைகளால் செப்பனிட்டு
புன்னகைப் பூக்களை
பொழிந்து வைத்தேன்.....

இழந்த சொர்க்கமொன்றின்
இதம் தந்த நினைவுகளின்
மீதத்திற்காய்....
சிற்சில நரகங்கள்
கடந்து வந்தேன்......

ஒற்றை முடி
உடைந்த வளையல்
கற்றைக் கடிதங்கள்
என உனதான எதையும்
ஒளித்து வைக்கவில்லை.....

உதடுதாண்டா புன்னகை
பரிவான மனம்
அன்பான அக்கறை
நேச வாசம் வீசும்
உரையாடல்கள்....

இப்படியாகத்தான்
வெளிப்பட்டது
என் சொர்க்கம்.....

இன்னும்
இன்னும்
என மனம் விரும்பும்
தருணங்களில்
தவிர்க்கப் படுகிறது......

கடமை அழைக்கலாம்
உறவு உறுத்தலாம்
கனவு கைவிடலாம்
நனவு இடித்துரைக்கலாம்
எனினும்......

உனக்கான உன்னுள்
உருவம் பெறா
என் அன்பின்
தவிர்க்கப் பட வேண்டிய
சிலதாய் அன்றி பலதாய்.....

நான் தவிப்பதை
அறிந்தும்
நீ தவிர்க்கலாம்....
பரவாயில்லை....
தவிப்பவனை தவிர்ப்பது
உனக்கு உவப்பே எனில்

நானும்
தவிப்பதை
தவிர்க்கிறேன்......

தவிர்த்தவாறே....
உன்
பார்வைக்
கோட்டுகளிலிருந்து
மறைகிறேன்......

நீயாவது இரு.....
நானில்லா
நிம்மதியோடு......

நானும் இருக்கிறேன்....
இழந்த சொர்க்கமொன்றின்
ஏக்கக் கற்பனையிலும்...
கடந்த பாதையினூடே
களித்த காதலிலும்......

நேசிப்பதைத் தவிர......???????????

எனக்கான பொழுதுகளில்
மலர்ந்திருக்கும் புன்னகை நீ....

எனக்கான கனவுகளில்
உயிர்த்திருக்கும் ஓவியம் நீ....

எனக்கான உறவுகளில்
தனித்திருக்கும் பெருமை நீ.....

எனக்கான பாடல்களில்
ஒலித்திருக்கும் இசையும் நீ....

எனக்கான கவிதைகளில்
இணைந்திருக்கும் பொருளும் நீ....

எனக்கான வெற்றிகளில்
உழைத்திருக்கும் முயற்சி நீ.....

எனக்கான தோல்விகளில்
எனைத்தேற்றும் தோழமை நீ....

எனக்கான இன்பங்களில்
மகிழ்ந்திருக்கும் இதயம் நீ....

எனக்கான பார்வைகளில்
விழுந்திருக்கும் காட்சி நீ....

எனக்கான தேடல்களில்
என்றும் கிடைக்கா அருமை நீ....

எனக்கான காதலில்
எனைத் துரத்தும் நினைவும் நீ....

எல்லாம் எனக்காக
இருக்கும் உனக்காக.....

என்ன செய்ய
தீவிரமாய் உனை இன்னும்

நேசிப்பதைத் தவிர......???????????

மனக்குதிரை..........................



நேசப் புற்களால்
நிரப்பப் பட்டு
காதல் வேலியிட்டு
அடைக்கப்பட்ட
என்
நினைவுகளின் வெளியெங்கும்

அலைந்து திரிந்து
கொண்டே இருக்கிறது
என்
மனக்குதிரை....
உன் நினைவுகளை
சுமந்தவாறே..........

விழி வழி காட்சிகளும்
கனவு வழி நீட்சிகளும்
இல்லாத
இயல்பின் வழிகளில்
கடந்து கிடக்கிறது
என் மனக்குதிரை.....
உனைக் காணும்
உத்வேகத்தோடு..............

என் மனக்குதிரை
விட்டுச் செல்லும்
குழம்படித்
தடங்களிலெல்லாம்
உன் பெயரொன்றே
பொறிக்கப் பட்டிருக்க.......

நீளும் சாலைகள் வழியே
ஓடும் மனக்குதிரை....
தன் கனவுகள் தந்த
கவிதைகளின் கால்களோடு...
கவிதைகள் எழுத வைத்த
உன் காதலின் தாபத்தோடு...

எவ்விதத் தடைகளையும்
எட்டித்தாவும்
என் மனக்குதிரை
உன் மௌனமெனும்
தடைகளிடம் மட்டுமே
மண்டியிட்டு நிற்கிறது.....

உடைத்தெறியும் வலிவுள்ளதுதான்
இருந்தும்...
உனைக்காயப்படுத்தா
காரணத்தோடே
காத்திருக்கிறது.....

உன் நினைவுகளை
மட்டுமே
சுமந்திருக்கும்
இந்த
மனக்குதிரை...
காத்துக் கிடக்கிறது
மாறாத காதலோடும்
நீங்காத நேசத்தோடும்......

விடையில்லா கேள்விகளுக்கு
சொந்தக் காரியே....
பாரதியின் கண்ணம்மாவாய்
எனக்குள் பதியப்பட்ட நீ
என் நினைவுகளை நெய்து
நேசப் பட்டாய் உடுத்திய நீ...

மௌனம் கலைக்கும்
நொடிகளுக்காகவே
காத்திருக்கும்
என் மனக் குதிரை
சுமந்து வரும்
உன் நினைவுகளின்
பாரத்திற்குள்
மறைந்திருக்கும்
நம் நேசத்தை......
மன்னித்தாவது போ..................

ஒற்றைப் பனை....

எனது சோலையில்
எல்லா மலர்களும்
வாசங்களோடும்
வண்ணங்களோடும்
பூத்துக் குலுங்கின…

எனது வானத்தில்
எல்லா நாட்களிலும்
பௌர்ணமிகள்
ஓய்வேயில்லாமல்
ஒளிவீசிக் கொண்டிருந்தன…

அவ்வப்போது
மழைக்கால நேரங்களில்
வந்து போகும்
வானவில் கூட
நிலைத்தே நின்றது…

என் மனமென்னும்
பூமியின் மீது
நட்பெனும் பெருமழை
பெய்துகொண்டே இருந்தது
ஓய்வென்பதே இல்லாமல்…

சோலையில் பாடி
பௌர்ணமி ஒளியிலாடி
நட்பு மழையில்
நனைந்து கொண்டேயிருந்தேன்
விட்டு விட்டு….

அவ்வப்போது மின்னலும்
ஆச்சரிய்மாய் இடிகளும்
நட்பு மழையில்
தென்பட்டாலும்
பாதிக்கவே இல்லை…

இப்படி நீண்ட
கனவுகளோடே
நிறைந்திருந்தன என் இரவுகள்
பிறகுதான் தெரிந்தது
நிஜம் சோலையல்ல பனையென்பது..

கடற்கரையோரப் பனையாய்
என் காத்திருத்தல் நீண்டிருந்தது
வறண்ட ஓலைகளின் சலசலப்பில்
மிரண்டு ஒடின பறவைகள்..
கூடுகளை விட்டு…

பருவங்கள் மாறிப்போகும்..
சூழல்கள் மாறிப்போகும்
ஆனாலும் என்ன
பனையின் தவம்
நீண்டிருக்கும்…..முடிவில்லாமல்……..

Friday, August 24, 2012

கண்ணம்மா....................

கண்ணம்மா.... என் தோழி......... இதழ் பிரியா புன்சிரிப்போடு இமையும் சிரிக்கும் அருவியென பொழியும் பேச்சில் அறிவின் வாசம் வீசும் தீது நன்று திருத்தும் உரிமையில் நட்பின் நேசம் பொங்கும் அவ்வேளைகளில் அவள் தோழி............... கண்ணம்மா.... என் காதலி... அரிதான பயணமொன்றில் என்னோடு ஓர் ஒற்றை நட்சத்திரம் பயணித்த வேளையில் நிலவாய் இருப்பது நானே என உரைத்து தனிமை போக்கி தன்னிலையும் என்னிலையும் மென்மையாய் உணர்த்திய அவ்வேளைகளில் அவள் காதலி..... கண்ணம்மா என் மனைவி.... கட்டளையிட்டு என் கோபம் ரசித்து என் தவறைத் தவிர்க்க வைத்து என் நிலைதன்னை யோசித்து எனக்காகவே எனை நேசித்த அவ்வேளைகளில் அவள் மனைவி..... கண்ணம்மா என் தந்தை.... உறவின் பொருளுரைத்து உரிமை தான் பெருக்கி எனைச் சில சமயம் ஊக்கி என் பிழைதனை போக்கி வாழ்வின் பொருளுரைத்த அவ்வேளைகளில் அவள் தந்தை..... கண்ணம்மா..... எனதுயிர்.... எல்லாம் இழந்தும் பெற்றும் ஏதுமற்ற பொழுதுகளில் யாதுமற்றவனாய் செயலிழக்கும் தருணங்களிலெலாம் நினைவுகளிலாடி எனை உயிர்ப்பிக்கும் அவ்வேளைகளில் அவள் எனதுயிர்...... Like · · Unfollow Post · Share · Delete Deepa Nagarani, Usha Maharani, Thenammai Lakshmanan and 15 others like this. Vijayalakshmi Viji aahaa....bala..kannamma...thozhiyaai, kadhaliyaai. manaiviyaai, thandhayaai, uyiraai.... ellamumaai... arumai.... January 16 at 3:22pm · Unlike · 4 Bala Ganesan Sadhasivam அக்கா..............நன்றிகள் அக்கா............... January 16 at 3:23pm · Like · 2 Bala Ganesan Sadhasivam Thank u tamizh akka :-) January 16 at 6:11pm · Like · 2 Thurairatnam Thayalan ‎//கண்ணம்மா..... எனதுயிர்.... எல்லாம் இழந்தும் பெற்றும் ஏதுமற்ற பொழுதுகளில் யாதுமற்றவனாய் ...See More January 16 at 7:01pm · Unlike · 3 ஒப்பிலான் பாலு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வித்தியாசமான கவிதை ...அருமையாக இருக்கு ..வாழ்க வளமுடன் ! January 16 at 7:12pm · Unlike · 3 Vishnu Rajan நல்ல கவிதை ஜி ..// கண்ணம்மா என் தந்தை.... உறவின் பொருளுரைத்து ...See More January 16 at 9:02pm · Unlike · 1 Amutha Thamizh · 20 mutual friends செம form ல இருக்கு .. gud .. நல்லது .. January 17 at 10:26am · Unlike · 2 Bala Ganesan Sadhasivam நன்றிகள் தயாளன்........ January 17 at 12:04pm · Like · 1 Bala Ganesan Sadhasivam பாலு ஜி.........மிக்க நன்றிகள்...... January 17 at 12:04pm · Like · 1 Bala Ganesan Sadhasivam விஷ்ணு ஜி......மிக்க நன்றிகள்.... January 17 at 12:05pm · Like · 1 Bala Ganesan Sadhasivam அம்முக்கா.....!!!!!!! :))))))))) January 17 at 12:05pm · Like · 1 Usha Maharani ஆஹா ......அருமையோ அருமை பாலா !!! அழகான சிந்தனை அமுதான தமிழில் மிளிர்கிறது ! :-) January 18 at 2:58am · Unlike · 2 Usha Maharani கண்ணமாவை என் தாய் என்று சொல்லாமல் போன காரணம் என்னவோ ??? January 18 at 2:59am · Unlike · 3 Vimala Siva கண்ணம்மா..என் குட்டிக் கவியரசு....!!!...:( January 24 at 12:14pm

நீயும் நானும்..........................

நீல வானம்.... நீ மேகம்... நான் காற்று.... கை கோர்த்து உலவியபோது நிலவு வெட்கப் பட்டு ஓளிந்து கொண்டது........ நீண்ட கடற்கரை.... நீ அலை... நான் கரை... நுரை சேர்த்து நாம் நடக்க கடல் கரை தாண்டி தொலைந்து போனது..... உயர்ந்த மலை... நீ அருவி... நான் பாறை... சிதறல்களாய் நாம் மாற பூமி துளைத்து புதைந்து போனது மலை.... அடர்ந்த காடு... நீ கொடி.. நான் மரம்.... பின்னிப் பிணைந்து நாம் கிடக்க எல்லை தாண்டி கிடந்தது காடும் காடு சார்ந்த பிறவும்.... பனிசூழ் இரவு... நீ கனா.... நான் உறக்கம்.... புன்சிரிப்புகளில் நாம் புதைய விடியலுக்குள் விழுந்து உறங்கிப் போனது இரவு.... பருவங்கள்... துருவங்கள்... பகலிரவு மாற்றங்கள் என எதுவுமே பாதிக்காத பயணமொன்றின் தொடக்கத்தில் நாம்...... எல்லைகளற்ற பாதையின் விளிம்புகளில் நம்பிக்கையோடே................. Like · · Unfollow Post · Share · Delete Magudapathi Govindaraj, Nisha Sivakumar, Indra Adaikappan and 8 others like this. 1 share Shiva Priya Very nice... Eppudi ipppidii azhagazhagaa ezhudharingalo !!! Super kalakkals bala :)) March 15 at 12:52pm · Unlike · 1 Bala Ganesan Sadhasivam ‎Shiva Priya :D Thanks a lot....... March 15 at 12:53pm · Like · 1 Prasanna Selvaraj super machan :):) March 15 at 2:17pm · Like Swamy Nathan பருவங்கள்... துருவங்கள்... பகலிரவு மாற்றங்கள் ...See More March 15 at 2:57pm · Unlike · 1 Vani Malligai arumaiii Bala Ganesan Sadhasivam....inoru murai padichutu thamizha comment podaren...okvaa...:) March 15 at 4:01pm · Unlike · 1 Bala Ganesan Sadhasivam Jingam thanks Innoru muraiya ? Ha ha ha nadakkira kariyama ithu ? March 15 at 4:19pm · Like · 1 Vani Malligai hahahaa...nadakunm...nadakkum...paaruu...:)) March 15 at 5:49pm · Unlike · 1 Bala Ganesan Sadhasivam Hmm parppom parppom :-) March 15 at 5:57pm · Like Indra Adaikappan nice poem. March 15 at 8:15pm · Unlike · 1 Bala Ganesan Sadhasivam Thank u indra mam :-) March 15 at 8:25pm · Like · 1 Nisha Sivakumar mmmmmmmmmmmmmmmmmmm March 16 at 1:12pm · Like Uma Ravikumar · Friends with Vani Malligai and 21 others எல்லைகளற்ற பாதையின் விளிம்புகளில் நம்பிக்கையோடே... March 17 at 8:10pm · Unlike · 1 Bala Ganesan Sadhasivam Yes uma mam :-) March 17 at 8:38pm · Like · 1 Magudapathi Govindaraj ‎:) March 18 at 12:35am · Unlike · 1

ஆருயிரின் கண்ணம்மாவிற்கு...................

வரவிற்கும் செலவிற்கும் இடையே வாக்கப்பட்ட வறியவனாய்... கனவுக்கும் நினைவுக்கும் இடையே களவாடப் பட்டிருந்தேன்.... ஒற்றை நிலா உருமாறும் மேகம் எதிர்பாரா காற்று..என என் எல்லைகள் வகுக்கப்பட்டிருந்தன எனக்கான நியமங்கள் வரையறைகளுக்குற்பட்டு.... கனிந்து முதிர்ந்திருந்த மரத்திலிருந்து உதிர்ந்து கிடந்த பழுத்த இலையென நானிருக்க அடித்து சுழற்றும் சூறாவளியென நீ வந்தாய்... உன்னால் மண்ணிலிருந்து விண்ணிற்கும் விண்ணிலிருந்து பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடந்தேன்..... கண்ணம்மாவாய் என்னுள் களம் புகுந்த நீ நாளும் பொழுதும் என்னுள் கனம் மிகுந்தாய்...... உனக்காய் உள்ளத்திருந்து உரைத்த கவிதைகளெங்கும் என் எண்ணங்களை பதிவு செய்தேன்..... விரகமுற்ற போதிலும் விரசமற்றே விளங்கிய என் வார்த்தைகளில் தவறென கொள்ள யாதுமேயில்லை தெரிந்தும் மாறிப்போன காரணம் யாதென அறியாதிருந்தேன் தகுதிகளும் புகழுமென்றால் மன்னித்து விடு எனக்கு அவைகளில் நம்பிக்கைகளில்லை அன்பும் பண்புமென்றால் மன்னித்து விடுகிறேன் உனகு அவைகளில் நம்பிக்கை யில்லை....... எதுவாயினும் என்னால் கண்ணம்மாவாக்கப் பட்ட உனக்கு காணிக்கையாய் என் கவிதைகளும் காதலும் எஞ்ஞான்றும்........... Like · · Unfollow Post · Share · Delete Nisha Sivakumar, Shiva Priya, Deepa Nagarani and 6 others like this. Uma Ganesh எதுவாயினும் என்னால் கண்ணம்மாவாக்கப் பட்ட உனக்கு ...See More June 22 at 3:59pm · Unlike · 1 Swamy Nathan அன்பும் பண்புமென்றால் மன்னித்து விடுகிறேன் உனகு அவைகளில் ...See More June 22 at 4:04pm · Unlike · 2 Poovalur Sriji கண்ணப்பனாய் அவள் மனம் புகும் நாள் தொலைவில்லில்லை.... எண்ணிப்பார்த்தால் பின்னாளில் எள்ளி நகையாடும் நேரமும் அருகிலில்லை...... அதுவரை இனிமை கவிதைகள் படைக்கப்படும்..... June 22 at 4:06pm · Unlike · 4 Bala Ganesan Sadhasivam Sonna swarasiyam kurainchidume uma mam :-) June 22 at 4:17pm via mobile · Like · 1 Bala Ganesan Sadhasivam Thanks swamy :-) June 22 at 4:17pm via mobile · Like Bala Ganesan Sadhasivam Kuru ji ! Ithukku perthan aappu :-o June 22 at 4:18pm via mobile · Like · 2 Jaya Prabha nice one :) June 22 at 8:06pm · Unlike · 1 Bala Ganesan Sadhasivam Nandrigal jaya mam June 22 at 8:57pm via mobile · Like Bala Ganesan Sadhasivam Nandrigal jaya mam June 22 at 8:58pm via mobile · Like Deepa Nagarani super! :) June 22 at 8:59pm · Unlike · 1 Shiva Priya Balaa.. ennatha sollaa... manasula odraa eNNaNgaLa ippidi azhagaa vaarthaigaLaala thoduthu romba beautifulla sollittinga... if only everyone could share their feelings in suchaa wonderful way...!! Beautiful Balaa.. KaNNammaa manasu iLaga enn wishes :D June 22 at 11:43pm · Unlike · 1 Bala Ganesan Sadhasivam Thanks deepa mam :-) June 24 at 7:56pm via mobile · Like · 1 Bala Ganesan Sadhasivam Thank u SP :-) For ur kind words :-) June 24 at 7:57pm via mobile · Like Nisha Sivakumar mmmm,,,good June 29 at 4:42pm · Unlike · 1

Wednesday, November 16, 2011

உள்ள வயலினிலே......

உள்ள வயலினிலே
உணர்வு ஏரோட்டி
கனவுச் செடி நட்டு
கற்பனை நீர் பாய்ச்சி
துளிர்க்கும் காலத்திற்காய்
ஆவலோடு காத்திருந்தேன்

மெல்ல துளிர்த்ததடி
மேனியெங்கும் சிலிர்த்ததடி
அரும்புகள் மலரும்போது
ஆசைகள் பெருகுதடி
அதிசயம் பாரென்று மனம்
ஆராவரம் செய்யுதடி

மெல்லக் களித்திருந்தேன்
மெதுவாக தவித்திருந்தேன்
மலரும் மொட்டைக்கான
மௌனமாய் தவமிருந்தேன்
மொட்டும் மலர்ந்ததடி
முகம் பார்த்து சிரித்ததடி

மலர்ந்த ரோஜாக்கள்
மணம் பரப்பி அழைத்ததடி
பறித்தால் வலிக்குமென்று
பார்வையோடு விடுத்திருந்தேன்
வண்ணங்கள் சிறந்திருக்க என்
எண்ணங்கள் தாரைவார்த்தேன்

முட்கள் குத்துதென்று
ரோஜா முனகியது
பறித்தால் வாடுமென
மனமோ தயங்கியது
உதிர்ந்ததடி ரோஜா
உறவான செடி நீங்கி...

முட்கள் குத்தியது
ரோஜாவிற்கு பிடிக்கவில்லை
முட்களை நீங்கி வாழ
செடிக்கும் விருப்பமில்லை
ரோஜா மாலையானது
செடியும் மொட்டு விட்டது

கண்ணின் இமை போல
காரிருள் நிலவு போல
தாய்க்கு தலைச்சன் போல
எண்ணி வளர்த்த நானோ
ஏங்கி தவித்திருந்தேன்
தவித்து தனித்திருந்தேன்.............

நீ.....

ஆதி நீ
அந்தம் நீ
அடக்க முடியா
ஜோதி நீ

வேதம் நீ
விதியும் நீ
விண்ணை வெல்லும்
மதியும் நீ

ஞானம் நீ
யோகம் நீ
ஞாலம் கடந்த
காலம் நீ

ஊனும் நீ
உயிரும் நீ
இடையில் இயங்கும்
உணர்வும் நீ

கனவும் நீ
நினைவும் நீ
கண்ணில் விரியும்
காட்சி நீ

இரவும் நீ
பகலும் நீ
இடைவெளி இல்லா
பருவம் நீ

கர்வம் நீ
கடமை நீ
என் காதல் தேடிய
காதலி நீ

அன்பும் நீ
பண்பும் நீ
வாழ்விற்கான
அர்த்தம் நீ

வானும் நீ
மண்ணும் நீ
இடையில் உலவும்
வளியும் நீ

இன்பம் நீ
இனிமை நீ
எனக்காய் பிறந்த
யாவும் நீ.......

உன்னை காயப்படுத்தாத என் காதலை.........

நேசித்த பொழுதுகளைப்பற்றி
நான் யோசித்ததே இல்லை
ஆயினும்....
யாசித்த சிலது பற்றி
வாதித்ததைப் பற்றி யோசித்ததுண்டு....

அளவு மீறிய
அன்புதானெனினும்...
வரப்பு மீறிய வெள்ளமாய்
அவ்வப்போது
அத்து மீறியதுண்டு....

அடிப்படை உரிமைகளில்
கூட நான் நுழைகிறேன்..
தவறுதான் என்றாலும்
தவிர்க்க முடியவில்லை....

உண்ணாயா உறங்கினாயா
என்பதோடு நிறுத்தியிருக்க
வேண்டும்தான்....
ஆனாலும்...அதனைத்தாண்டியும்
உன் சுயகௌரவங்களில்
தலையிட்டிருக்கிறேன்......

சுயவிருப்பங்களின் பேரில்
நீ சுடர் தீண்டப் போகும்போது
சுடும் என சொல்லி
தடுத்திருக்கிறேன்....
தவிர்த்திருக்க வேண்டும்தான்....
ஆனாலும் இயலவில்லை.....

எதிர்பார்ப்புகள் அதிகம்தான்
என்ன செய்ய
அவ்வப்போது அறிவு சுட்டினாலும்
உன்னைத்தவிர வேறு
யாரிடம் எதிர்பார்க்க
என்றே சமாதானப்படுத்திக் கொண்டேன்...

புரியாத அல்லது
புரிய விரும்பாத எனக்காக
பாவம் நீயும்தான்
உன் விருப்பங்களை
விலக்கி வைத்து.....
எத்தனை முறைதான் தவிப்பாய்...

சுகங்களை சுருக்கி வைத்து
சோகங்களை பெருக்கி வைத்து
என் அக்கறை
உனக்குத்தான் எத்தனை
அகக் குறைகளை
அளித்திருக்கிறது....

ஆனாலும் நீ...
அமைதியாகத்தான் இருக்கிறாய்...
ஆழ்கடல் கொண்ட நீராய்
உன் காதல் ஆர்ப்பாட்டமில்லாமல்....
கரையோர அலையாய்
என் காதல்..
ஓரிடத்தில் நில்லாமல்....

இப்போதும்
புரிகிறதா என்றால்
தெரியவில்லை பெண்ணே....
அறிவு காதலின் கரையில்
அவகாசமெடுத்து கட்டிய மணல்வீட்டை...
அவசரமாய் கிளம்பி வரும்
என் அக்கறை அலைகள்
அழிக்கவே துடிக்கின்றன.....


யாசித்துக் கொள்கிறேன்
எனக்கு நானே....
அளவு மீறிய அன்பை...
இம்சிக்காத அக்கறையை...
உன்னை காயப்படுத்தாத
என் காதலை....

எதிர்பார்ப்புகளோடு.............

உன் நினைவுகள்....
அணை கடந்த நதி நீராய்....
நீர் வசிக்கும் சிறு மீனாய்...
மீன் ருசிக்கும் பசும் பாசியாய்...
என் மனதின் இரு கரை நெடுக
நிறைந்திருக்கின்றன.....

என் கனவுகள்...
நாம் கடக்கும் சாலையாய்
சாலையிடையே வரும் சோலையாய்...
சோலை கொண்ட சுவைகனியாய்..
என் வாழ்வின் நீளமெங்கும்
காத்திருக்கின்றன....

என் ஆசைகள்...
இதம் தரும் மாலையாய்...
மாலை வரும் நிலவொளியாய்..
நிலவொளியில் மலரும் அல்லியாய்....
என் இளமையின் தேகமெங்கும்
மணந்திருக்கின்றன.....

என் ஏக்கங்கள்.....
எல்லையில்லா பாலையாய்...
பாலை கொண்ட கோடையாய்...
கோடை தரும் தாகமாய்...
என் நாட்களின் நகர்வுகளில்...
வழிந்திருக்கின்றன....

என் தாபங்கள்.....
இதழ் விரித்த மலராய்...
மலர் கொண்ட தேனாய்...
தேன் சுவைக்கும் வண்டாய்....
என் காதலெங்கும் மௌனங்களாய்..
விரிந்து கிடக்கின்றன....

இன்னும்....
ஒவ்வொரு உணர்வுகளும்
இயற்கையோடியைந்தே..
இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன்...
ஒரு நாள் உன்னில் உய்யலாமென்ற...
எதிர்பார்ப்புகளோடு..............

என்னைத் தொலைத்த நான்..

கண்ணாரப் பார்த்து..
காதாறப் பேசி...
கைகோர்த்து நடந்து
நாம் காதலிக்கவில்லை....

வருகைக்காக காத்திருந்து..
வந்த பின ஊடல் கொண்டு..
நடைபாதைப் பூங்காக்களில்
நாம் மகிழ்ச்சி விதை தூவவில்லை....

உனக்காக அலைந்திருந்து..
உனக்காக தேர்வு செய்து..
உனக்காக ஒரு பரிசை
நான் ஒரு பொழுதும் தந்ததில்லை...

உன்னுடைய நலனைத் தவிர..
உனக்கான மதிப்பைத் தவிர...
நமக்கான காதலில்
வேறெதுவும் நாடவில்லை....

நானுனக்கு ஒரு சில
உதவாக் கவிதைகளும்
சில பல கண்ணீர்த்துளிகளையுமே
கையளித்திருக்கிறேன்....

இன்றோ.....
தாய்க்கு ஏங்கும் பிள்ளையாய்
அலைமோதிக் கொண்டிருக்கிறேன்...
அனல் மீது நின்று கொண்டிருக்கிறேன்...

தொடுக்கப்பட்ட
என் கேள்விகளுக்கு
புறக்கணிப்பையே பதிலாக்கி
போய்க்கொண்டிருக்கிறாய்...

இன்னும் சில கவிதைகளும்
ஏராளமான கண்ணீர்த்துளிகளும்
உன்னிடம் ஒப்படைக்கவே
என் கணக்கில் இருக்கின்றன

என்ன செய்ய....???
கண்ணீர்த்துளிகளாலேயே
கடந்த காலங்களை கழுவிப் பார்த்தும்
விடை தெரியவில்லையே..???

ஆசைப்பட்ட பொம்மையைத்
தொலைத்த் குழந்தையாய்..
என்னைத் தொலைத்த நான்..
கண்ணீரோடும் அதில் நிறைந்த காதலோடும்......

உன் நினைவுகள் போதுமடி............

மண்கோட்டை எனத்தெரிந்தும்
மலையளவு கட்டி வைத்தேன்
உயிர்க்கோட்டை கருகக்கருக
உணர்வுத்தீ எரிய வைத்தேன்....

பலிக்காத கனவென்று-புத்தி
பழித்தே கூறினாலும்
புத்தியைப் புறந்தள்ளி
புதுக்கனவு நான் கண்டேன்.....

இரவு பகல் விழித்திருந்தேன்
பசி தூக்கம் தொலைத்திருந்தேன்..
கண்ட கனவு நனவாக
கடும் முயற்சி நான் கொண்டேன்....

உள்ளமதில் கள்ளமில்லா
உணர்வுகளில் பொய்யுமில்லா
உன்னோடு நான் வாழ
உயிர் வரை ஆசை வைத்தேன்...

கொண்ட நிலை தவறாமல்
கொள்கை குணம் மீறாமல்
எள்ளழவும் பிறழாமல்
உன்னைக் காதலித்தேன்......

உன் நிலை தனையறிந்தே-இன்று
உயிர் வதை தாங்கி நின்றேன்
என் நிலை தனையெண்ணி
ஏங்காதே கண்மணியே....

உயிர் கொண்ட காதலுக்கு
உடலங்கள் தேவையில்லை
உணர்வால் வாழ்ந்திருந்தும்
ஒழுக்கமதை மீறவில்லை....

கண்ணே கலங்காதே
யாவும் கடந்து போகும்
பெண்ணே வருந்தாதே
வலியெல்லாம் ஒரு நாள் தீரும்.....

புது வாழ்வு நீ தொடங்கி
புதுக்கனவு நீ கண்டுணர்ந்து
இன்பமாய் இல்வாழ்வில்
இணைந்திருக்க வாழ்த்துகின்றேன்...

உன் நினைவுகள் போதுமடி
நான் உயிர் வாழ்ந்திருக்க
என் கனவுகள் போதுமடி
என் காலம் கழிந்திருக்க...

உன் நலம் போதுமடி
என் நலம் சிறந்திருக்க
உன் சிரிப்பு போதுமடி
என் துக்கம் மறந்திருக்க..

என்னுடைய பிரார்த்தனையில்
உனக்கும் ஒரு இடமுண்டு
என்னுடைய காதலுக்கு
உனக்குமட்டுமே இடமுண்டு.......

என் நட்புப் பூக்கள்.....

மேகங்களில் சூல்கொண்டு
மழையாய் பொழிந்து..
அருவியாய் விழுந்து..
ஆறாய்ப் பெருகி
ஓடி வருகிறது -என்
நட்பெனும் ஆறு....

கண்டங்கள் கடந்த
பந்தங்களோடும்...
தேசங்கள் கடந்த
நேசங்களோடும்..
அதில் மலர்ந்து வருகின்றன-என்
நட்புப் பூக்கள்.....

அன்பொன்றே
இணைக்கும் சங்கிலியாக...
உதட்டளவிலோ...
உயிரளவிலோ...
ஒன்றாய்க் கலந்தே...
உலவிக் கொண்டிருக்கின்றேன்....

அவ்வப்போது தடைகளாகும்
பாறைகளை..
தவிர்த்தோ..பொடித்தோ..
புரண்டோடி வருகிறது
என் நட்பெனும் ஆறு.....

ஐவகை நிலத்திலும்
ஆற்றுப் புனலாய்...
எந்தவொரு வீழ்ச்சியிலும்
தேற்றும் உறவாய்..
உணர்வுகள் யாவிலும்
உறைந்தே கிடக்கின்றன- என்
நட்பெனும் வசந்தங்கள்....

நிறையச் சிரித்து...
மறைவாய் அழுது...
குறையாப் பாசமும்
மறையா அன்புமாய்
என்னோடு
இயைந்தே மகிழ்ந்து
கிடக்கின்றன நான் கொண்ட நட்பூக்கள்....

நேசம் கொண்ட உறவுகளை..
வாசம் மிகுந்த நட்புக்களை...
வாசித்தும் நேசித்தும்
வாழ்ந்து கிடக்கிறேன் நான்
வாசம் வீசும் வனமாய்......